மதுரையில் அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு .

Published Date: January 13, 2025

CATEGORY: CONSTITUENCY

 

 

தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும் என்பதை நமது முதலமைச்சரின் நோக்கம்: மதுரையில் பழனிவேல் தியாகராஜன் பேச்சு:

மதுரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக அமைச்சர் கே.என்.நேரு மதுரை மாநகராட்சி சார்பாக அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு திருப்பரங்குன்றம் மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் புதிதாக பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மதுரை கிழக்கு திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் 471.89 கோடி மதிப்பிலான புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் தலைமை உரையாற்றிய தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும் என்பதை நமது முதலமைச்சரின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற வகையில் வளர்ந்து வரும் மாநகர பகுதிகளில் அடிப்படை வசதிகளான பொதுமக்களுக்கு செய்து தரும் நோக்கத்துடன் இந்தப் பெரும் முயற்சி இன்றைக்கு துவங்கப்பட்டு இருக்கிறது இந்த முயற்சி சரியான நேரத்தில் சரியான செலவில் அனைவருக்கும் பயன் அளிக்கிற வகையில் சிறப்பாக நிறைவுபெற வாழ்த்துகிறேன் என பேசினார். 

இந்த நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் தலைவர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி (மதுரை வடக்கு) ,வெங்கடேசன் (சோழவந்தான்), பூமிநாதன் (மதுரை தெற்கு) ,மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

 

Media: Thamizhaga News